கூகுள் தேடல்
கூகுளில் தேடும்போது, அந்த தேடும் சொல்லுக்கு பொருள் அறிய விரும்பினால் define: என்ற சொல்லை, நீங்கள் தேடும் சொல்லுக்குப் பின் இணைத்துக் கொடுத்தால், பல அகராதிகளிலிருந்து அந்த சொல்லுக்குப் பொருள் தரப்படும். ஆனால் இப்போது, அண்மைக் காலமாக, ஏதேனும் ஒரு சொல் குறித்த இணைய தளங்களைத் தேடினால், முதல் பதிவாக, அந்த சொல்லின் பொருள் தரப்படுகிறது. அந்த சொல் எத்தனை தொகுதிகள் கொண்டது எனக் காட்டப்பட்டு, பொருளும் தரப்படுகிறது.
அதனை அடுத்து, அந்த சொல் சார்ந்த தளங்கள் காட்டப்படுகின்றன. சொல்லின் பொருள் நம் கண்களிலிருந்து தவற விடாத வகையில், சிறப்பாகக் காட்டப்படுகிறது. இது நமக்குப் பலவகைகளில் உதவுகிறது. நாம் தேடுவது வேறு ஒரு வேலைக்கு என்றாலும், அதன் பொருள் கிடைப்பதனால், மேலும் தகவல்களை அறிய முடிகிறது.
F1 Button ஐ அழுத்த வேண்டாம் !
ஏதேனும் இணையதளம் ஒன்றினைப் பார்க்கையில், அதில் F1 கீயை அழுத்தவும் என்று செய்தி தரப்பட்டால்; உடனே அதனை அழுத்த வேண்டாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. இதன் மூலம் பல இணைய தளங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரை மோசமான தளங்களுக்கு இழுத்துச் சென்று, அவர்கள் கம்ப்யூட்டரில் பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களைப் பதிக்கின்றன. இதனால் தங்கள் கம்ப்யூட்டர்களில் உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் செட்டிங்குகளில், அவற்றை “high” என்ற அளவில் அமைக்குமாறும் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ActiveX Controls மற்றும் Active Scripting ஆகியவற்றைத் தடை செய்திட முடியும். இந்த மால்வேர் பெரும்பாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துவோரையே இலக்காகக் கொண்டு இயங்கு வதாகவும் மைக்ரோசாப்ட் எச்சத்துள்ளது. விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றைப் பயன்படுத்து வோரே இதற்கு இலக்காகுகின்றனர்.
இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில், இணைய தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் எப்1 அழுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அழுத்தியவுடன் கம்ப்யூட்டர் ஹைஜாக் செய்யப்பட்டு, மால்வேர் புரோகிராம் பதியப்படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்வு ஒன்றை வழங்கியுள்ளது. லிங்க் தரப்பட்டாலோ, அல்லது பாப் அப் விண்டோ வந்தாலோ, உடனே CTRL + ALT + DEL கீகளை அழுத்தவும். உடனே கிடைக்கும் கட்டத்தில் Internet Explorer task என்ற பிரிவு அல்லது உங்கள் பிரவுசர் பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெலீட் கீயினை அழுத்தவும்.பின் மீண்டும் பிரவுசரை இயக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.
விண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள்
விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப் படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்
ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர
ALT+2: ஸூம் 100 சதவிகிதமாக்க
ALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்க
ALT+ Enter: வீடியோ காட்சியை முழுத்திரை யில் காண
ALT+F: மீடியா பிளேயர் பைல் மெனு செல்ல
ALT+T: டூல்ஸ் மெனு செல்ல
ALT+P: பிளே மெனு செல்ல
ALT+F4: மீடியா பிளேயரை மூடிவிட
CTRL+1: மீடியா பிளேயரை முழுமையான தோற்றத்தில் கொண்டு வர
CTRL+2: மீடியா பிளேயரை ஸ்கின் மோடில் கொண்டு வர
CTRL+B: இதற்கு முன் இயங்கியதை மீண்டும் பிளே செய்திட
CTRL+F: வரிசையில் அடுத்த பைலை இயக்க
CTRL+E சிடி டிரைவில் இருந்து சிடி/டிவிடியை வெளியே தள்ள
CTRL+P இயங்கிக் கொண்டிருக்கும் பைலை தற்காலிகமாக நிறுத்த / இயக்க
CTRL+T: இயங்கியதை மீண்டும் இயக்க
CTRL+SHIFT+B: ஒரு பைலை ரீவைண்ட் செய்திட
CTRL+SHIFT+F: ஒரு பைலை பாஸ்ட் பார்வேர்ட் செய்திட
CTRL+SHIFT+S: வழக்கத்திற்கு மாறாக மெதுவாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+G: வழக்கத்திற்கு மாறாக வேகமாக ஆடியோ/வீடியோ இயக்க
CTRL+SHIFT+N: சரியான வேகத்தில் ஆடியோ/ வீடியோ இயக்க
F8: மீடியா பிளேயரின் ஒலியை அப்படியே நிறுத்த
F9: மீடியா பிளேயரின் ஒலியை குறைத்திட
F10: மீடியா பிளேயரின் ஒலியை அதிகரிக்க
Enter / Space bar: ஒரு பைலை இயக்க
கிளிப் பாக்ஸில் அடுக்கலாம்
விண்டோஸ் தரும் கிளிப் போர்டுக்கு, ஒருமுறை ஒரே ஒரு டெக்ஸ்ட் அல்லது படம் மட்டுமே அனுப்ப முடியும். அடுத்த என்ட்ரி அமைக்கையில், முதலில் உள்ளது நீக்கப்படும். எனவே நிறைய தனித்தனி டெக்ஸ்ட் அல்லது படத்தினை காப்பி மற்றும் பேஸ்ட் செய்திட வேண்டுமென்றால், தனித்தனியே ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள வேண்டும்.
இந்தக் குறையை நீக்குகிறது கிளிப் பாக்ஸ் என்னும் புரோகிராம். இது கிளிப் போர்டின் ஒரு விரிவாக்கம் என்று கூடச் சொல்லலாம். இதில் 2,000க்கும் மேற்பட்ட விஷயங்களை காப்பி செய்து வைத்து, தேவைப்படும்போது தேவையான விஷயங்களை மட்டும் எடுத்து பேஸ்ட் செய்திடலாம். இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. இந்த கிளிப் பாக்ஸில் டெக்ஸ்ட் என்ட்ரிகள் மட்டுமே காப்பி செய்து வைக்க முடியும். படங்கள் மற்றும் பிற விஷயங்களை இது ஒதுக்கிவிடுகிறது.
இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த அப்ளிகேஷனை இயக்கியவுடனேயே செயல்படத் தொடங்குகிறது. இந்த சாப்ட்வேர் சிஸ்டம் ட்ரேயில் ஒரு ஐகானை அமைக்கிறது. இதனைக் கிளிக் செய்தால், கிளிப் போர்டில் உள்ள அனைத்து காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட்களைக் காட்டுகிறது. இதில் காப்பி செய்யப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை, காப்பி செய்திட வேண்டும் எனில் இரண்டு வழிகள் உள்ளன. அந்த டெக்ஸ்ட் இருக்கும் இடம் சென்று டபுள் கிளிக் செய்திடலாம். அல்லது கண்ட்ரோல் + சி அழுத்தலாம். வேறு ஷார்ட் கட் கீகள் எதுவும் இதில் செயல்படவில்லை என்பது சிறிய ஏமாற்றமே.
இதில் ரைட் கிளிக் செய்தால், பல ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு டெக்ஸ்ட்டும் எப்போது கிளிப் பாக்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டது என நாள் மற்றும் நேரத்தினைத் தானாக அமைக்கும் வசதி உள்ளது.
இந்த கிளிப் பாக்ஸ் விண்டோவினை எப்போதும் திறந்து வைத்து, வேகமாக டெக்ஸ்ட்களை எடுக்கலாம்.
கிளிப் பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர். இதனை இது போன்ற பல அப்ளிகேஷன்களைத் தரும் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதற்கான முகவரி: http://sourceforge.net/ projects/clipbox/ ஆகும்.
PC speed
கணினியின் வேகம் அதிகரிக்க டிப்ஸ்
Start -> Run -> msconfig என அடித்து எண்டர் கொடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Startup டேப்பை திறந்து அதில் இருக்கும் எல்லாவற்றையும் Disable செய்து விடவும் வேண்டுமானால் Anti Virus மென்பொருள் மட்டும் Enable செய்துகொள்ளவும் இதனால் கணினியின் Boot நேரம் குறையும்.
இனி வாரம் ஒரு முறையாவது Start -> Run -> temp என அடித்து எண்டர் கொடுத்து அதில் இருக்கும் பைல்களை அழித்து விடவும், மீண்டும் Start -> Run -> %temp% என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும் , அடுத்ததாக Start -> Run -> prefetch என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும்.
இன்னும் ஒரு சிறிய தகவல்: நம் தேவைக்காக இனையத்தில் கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள்களை தரவிரக்கி நம் கணினியில் பதிந்து வைத்திருப்போம் அப்படி பதிந்த புரோக்கிராம்கள் மீண்டும் அவசியமில்லை என்றால் மறக்காமல் அன் இன்ஸ்டால் செய்து விடவும் அப்படி உள்ள புரோகிராம்களை முழுவதுமாக நீக்க அன் இன்ஸ்டாலர் உபயோகிக்கவும்.
டீபிராக்மெண்ட் இது கணினியை டீபிராக்மெண்ட் செய்வதற்கானது இது நமது கணினியில் இந்த வசதி இருக்கிறது ஆனால் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் இந்த டீபிராக்மெண்ட் எதற்காக என நினைக்கும் நண்பர்களுக்காக சின்ன தகவல் நாம் கணினியில் பதியும் தகவல்கள் எல்லாம் ஒரே இடத்தில் பதிந்து வைக்கபடுவதில்லை ஒரு பைல் பல்வேறு இடங்களில் பிரித்து பதியப்படும் அதாவது நமது வண்தட்டு பல்வேறு கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டிருக்கும் நாம் டீபிராக்மெண்ட் செய்கையில் பல இடங்களில் இருக்கும் பைல்களை எடுப்பதற்கு வசதியாக ஒருங்கினைக்கும் வேலையை தான் இந்த டீபிராக்மெண்ட் செய்கிறது.
சி சி கிளீனர் இது கணினியில் இருக்கும் தேவையில்லாத ரிஜிஸ்டரியை அழகாக கிளீன் செய்து விடும் உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்து மீண்டும் அன் இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் ஆனால் நீங்கள் அன் இன்ஸ்டால் செய்த புரோகிராமை ரிஜிஸ்டரியில் தேடிப்பார்த்தால் இருக்கும் அதை நீக்குவதற்காகத்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு தெரியும் கணினியின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ரிஜிஸ்டரி வழிதான் மேற்கொள்ள படுகிறது நாமாக மாற்றங்கள் செய்ய நினைத்து தவறு நேர்ந்தால் கணினியின் இயக்கமே நின்று விடும் ஆனால் சிசி கிளீனர் உபயோகிக்கையில் அந்த பிரச்சினை வராது மேலும் சில நேரங்களில் Recycle Bin ல் சில பைல்களை அழிக்க முடியாமல் இருக்கும் அதையும் இந்த சிசி கிளீனர் கொண்டு அழித்து விடலாம்.
Blocked Web
தடைசெய்யப்பட்ட தளத்தில் இருந்து தகவல்களைப் பெறும் வழி
தடை செய்யப்பட்ட தள தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது? சில இடங்களில் கணினி தகவல் சம்பந்தப்பட்ட தளங்களை கூட இண்டர்நெட் சரிவீஸ் புரைவைடர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக தடை செய்திருப்பார்கள் அந்த நேரத்தில் புராக்ஸி சர்வரும் கூட உதவாது. அப்படியான நிலை ஏற்படும்போது பின்வரும் வழியினை பின்பற்றவும்
அதற்கு உங்களிடம் அவசியம் ஒரு மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும். உதாரணத்திற்கு ஜிமெயிலை எடுத்துக்கொள்வோம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலை திறந்து அனுப்ப வேண்டிய முகவரியில் www@web2mail.com என்பதை எழுதவும். இனி சப்ஜெகட் என்பதில் தடை செய்யப்பட்ட இனையதளத்தின் முகவரியை கொடுக்கவும். இனி வேறு ஒன்றும் செய்யவேண்டாம் அப்படியே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள் குறைந்த பட்சம் நான்கு மணி நேரத்திற்குள் தடை செய்ப்பட்ட தளத்தில் உள்ள தகவல்கள் உங்கள் இன்பாக்ஸில் இருக்கும் சில நேரம் நேரம் கூடுதல் ஆகலாம் ஆனாலும் தகவல் எப்படியும் வந்துவிடும்.
இதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தில் வீடியோ அல்லது இமேஜ்கள் இருக்குமானால் அவை உங்கள் இன்பாக்ஸிற்கு வராது டெக்ஸ்ட்டுகள் மட்டுமே வரும்.
Kernel
கம்ப்யூட்டர் இயங்குவதில் கெர்னல் (kernel) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்போது வரும் வைரஸ் பிரச்னைகளிலும் இது குறித்து எழுதப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது?
பலவகையான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கெர்னல் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது ஒரு கரு போன்றது. ஹார்ட்வேர் அளவில் நடக்கும் டேட்டா கையாளுதல் செயல்பாட்டிற்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு பாலமாக, இது இயங்கும். சிஸ்டத்தின் திறன்களை, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் செயல்பாடு களுக்கெனத் திறமையாக நிர்வாகம் செய்வது கெர்னல் ஒன்றின் பொறுப்பு. சிஸ்டத்தின் திறன் என்பது சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட், ராம் நினைவகம், கீ போர்டு, மானிட்டர்,டிஸ்க் ட்ரைவ் மற்றும் பிரிண்டர் போன்ற உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகியவை ஆகும். இவற்றிலிருந்து கிடைக்கும் வேண்டுகோள் கட்டளைகளை, அவற்றின் நிலை அறிந்து, பெற்று இயக்குவது இந்த கெர்னலின் பொறுப்பு.
விண்டோஸ் இயக்கத்தில் இது எப்படி இடம் பெற்றுள்ளது என்றும் பார்க்கலாம். 1985ல், அப்போதிருந்த எம்.எஸ். டாஸ் இயக்கத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத்தான் விண்டோஸ் வெளியானது. விண்டோஸ் தன் இயக்கத்திற்கு, டாஸ் இயக்கத்தின் மீது சார்ந்து இருந்ததால், விண்டோஸ் 95 இயக்கத்திற்கு முன் வந்தவை, ஆப்பரேட்டிங் சுற்றுவட்டம் (என்விரான்மென்ட்) (கவனிக்க: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லை) என அழைக்கப்பட்டது. இப்படியே விண்டோஸ் இயக்கம் 1980 முதல் 2000 வரை இருந்தது. பின்னர் படிப்படியாக கெர்னலிலேயே பயன்பாட்டு செயல்பாடுகளும் தரப்பட்டு, முழுமையான கெர்னல் இயக்கத்தில் விண்டோஸ் பயனாளர் பயன்பாடு அமைந்தது.
அண்மைக் காலத்தில் இந்த கெர்னல் செயல்பாட்டில், விண்டோஸ் 7 உட்பட, அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிழை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அவற்றைத் தீர்க்கும் பேட்ச் பைல்களைத் தருவதில் ஈடுபட்டுள்ளது.
MS Word
வேர்ட் தொகுப்பில் மேலாக உள்ள டூல்பாரில் (பைல், எடிட்,வியூ போன்றவை இருப்பது) உள்ள மெனு பெயர்களில், சில எழுத்துக்களில் மட்டும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது ஏன் தெரியுமா?
File என்பதில் F எழுத்திலும், Edit என்பதில் E எழுத்திலும் அடிக்கோடு இடப்பட்டுள்ளது. அவை அந்த மெனுவின் ஷார்ட் கட் எழுத்தைக் குறிக்கின்றன. Alt கீயுடன் இந்த எழுத்துக்களை அழுத்தினால், அந்த மெனுக்கள் விரியும். எடுத்துக்காட்டாக View என்ற மெனு பெற Alt+V அழுத்தினால் போதும்.
Recycle Bin
பைல்களை அழிக்கும்போது, அவை நேராக ரீசைக்கிள் பின்னுக்குச் செல்கின்றன. அப்படி வேண்டாம் எனில், ஷிப்ட் அழுத்தியவாறு டெலீட் கொடுத்தால், அங்கு செல்லாமல் அழிந்து போகின்றன. நாம் அழிக்கும் பைல்கள், எமக்கு உறுதியாகத் தெரியும் பட்சத்தில், எப்போதும் அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லவிடாமல் தடுக்கும் முறை.
அதாவது பைலை அழிக்கும்போது அது, அழிக்கப்பட்டே ஆக வேண்டும். ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என்று விரும்புகிறவர்கள். அதற்காக செட் செய்திடலாம். ரீசைக்கிள் பின் ஐகான் டெஸ்க்டாப் திரையில் உள்ளதல்லவா? அதில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். இப்போது ரீசைக்கிள் பின் ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு திரை காட்டப்பட்டு, அதில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க் பிரிவுகள் அனைத்தும், அவற்றின் எழுத்து மற்றும் பெயருடன் தெரியவரும். இதில் Use one setting for all drives என்று ஒரு ரேடியோ பட்டனுடன் கூடிய வரி இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது அதன் கீழாக, ஒரு சிறிய கட்டத்துடன், Do not move files to the Recycle Bin. Remove files immediately when deleted என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்க டிக் அடையாளம் அமைத்து ஓகே கொடுக்கவும். இனி ஜாலியாக பைல்களை அழிக்கவும். அது குப்பைத் தொட்டிக்குப் போகாது. ஆனால் எதற்கும் ஒருமுறைக்கு இருமுறை இந்த ஆப்ஷனை மேற்கொள்ளும் முன் யோசிக்கவும்.
ஃபைல்கள்
.pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக் (PDF Viewer) கொண்டு திறக்கலாம். Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். தற்போது இந்த வகை பைல்களை மீண்டும் டெக்ஸ்ட்டாக மாற்றுவதற்கும் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அடோப் அக்ரோபர் ரீடர் உட்பட இந்த வகை பைல்களைத் திறந்து படிக்கக் கூடிய புரோகிராம்கள் அனைத்தும் இலவசமாகக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது
ஃபைல்கள்
.csv: ஒரு ஸ்ப்ரெட் ஷீட்டில் அமைக்கப்பட வேண்டிய தகவல்கள் காற்புள்ளிகள் என அழைக்கப்படும் கமாக்களால் பிரிக்கப்பட்டு பைலாக அமைக்கப் படுகையில் இந்த துணைப் பெயர் அந்த பைலுக்குக் கிடைக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமில் திறந்து பார்க்கலாம். அல்லது தகவல்களை சும்மா பார்த்தால் போதும் என எண்ணினால் எந்த வேர்ட் தொகுப்பு மூலமும் பார்க்கலாம்.
ரைட் க்ளிக்
புரோகிராம்களை இயக்க மவுஸின் இடது பட்டனைக் கிளிக் செய்கிறோம். அதே போல நாம் அடிக்கடி பயன்படுத்தும் இன்னொரு செயல்பாடு மவுஸின் வலது பட்டனைக் கிளிக் செய்வது. இதனால் வித்தியாசமான மெனு ஒன்று கிடைக்கும். எடுத்துக்காட்டாக, டெஸ்க்டாப்பில் புதிய போல்டர் வேண்டுமா? ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் சென்று புதிய போல்டரைத் தயார் செய்கிறோம். பைல்களின் பெயர்கள் மீது ரைட் கிளிக் செய்து அதனை அழிக்கிறோம்; காப்பி செய்கிறோம்; சேவ் செய்கிறோம்; மறு பெயர் கொடுக்கிறோம். டெக்ஸ்ட் மற்றும் படங்களைத் தேர்வு செய்து அவற்றையும் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளுக்கும் உட்படுத்துகிறோம். இது ஒரு சில தான். எத்தனையோ செயல் பாடுகளுக்கு நாம் ரைட் கிளிக்கினைத்தான் சார்ந்திருக்கிறோம். மவுஸில் மேற்கொள்ளும் இந்த ரைட் கிளிக் பயன்பாட்டினை, கீ போர்டு வழியாகவும் மேற்கொள்ளலாம். ஷிப்ட் + எப்10 என்ற பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்கான ரைட் கிளிக் மெனு உங்களுக்குக் கிடைக்கும்.
BIOS
பயாஸ் (BIOS Basic Input Output System) : அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதனைத் தேடிப் பார்த்து சரியான பின்னரே முழுமையாக இயக்கத்திற்கு வழி விடும். இல்லை என்றால் என்ன குறை என்பதனைத் தெரியப்படுத்தும்.
ஃப்ளாஷ் ட்ரைவில் ஆன்ட்டி வைரஸ்
பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது. வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா!
நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்படுத்தப் படுகிறோம். அப்போது அதில் உள்ள வைரஸ் மற்றும் ஸ்பைவேர் புரோம்கிராம்களுக்கு எதிரான தடுப்புகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிப்பட்ட புரோகிராம்கள் பதிந்து வைக்கப்பட்டிருந்தாலும், அவை அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் தீர்மானிக்க முடியாது. எனவே நாம் கையில் எடுத்துச் செல்லும் பிளாஷ் ட்ரைவ்களில் இந்த புரோகிராம்களைப் பதித்து இயக்க முடியும் என்றால் நமக்கு நல்லதுதானே! அது போன்ற பல புரோகிராம்கள் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று http://www.freeav.com என்ற முகவரியில் உள்ளது. இதன் பெயர் AntiVir. இதன் சிறப்பு தன்மை, இந்த புரோகிராமினை ப்ளாஷ் ட்ரைவில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும். அடுத்ததாக, இது ஆண்ட்டி வைரஸ் புரோகிராமாக மட்டுமின்றி, ஸ்பைவேர் புரோகிராம்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. இதனை ஹார்ட் டிஸ்க்கில் பதியாமல், ப்ளாஷ் ட்ரைவில் பதிந்தே இயக்கவும்.
ஸ்பைவேர்களுக்கு எதிரான இத்தகைய புரோகிராம் ஒன்றும் இணையத்தில் கண்ணில் பட்டது. இதன் பெயர் AdAware SE Personal Edition 1.06.இதனையும் பிளாஷ் ட்ரைவில் வைத்தே பயன்படுத்தலாம். ஆனால் இதனை இன்ஸ்டால் செய்கையில், முதலில் ஹார்ட் டிஸ்க்கில் இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ் சென்று அதில் உள்ள AdAware பைலை காப்பி செய்து, பிளாஷ் ட்ரைவில் பேஸ்ட் செய்து இயக்கவும். இந்த புரோகிராமினை
http://www.imgsrv.worldstart.com/download/aawsepersonal.exe என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம்.
பிரிண்டருக்கான குறிப்புகள்
எப்போதும் பிரிண்டருக்கான புதிய டிரைவரை நிறுவ வேண்டும். பிரிண்டரை வாங்கும்போது அதனுடன் தந்துள்ள டிரைவரை பின்பு மேம்படுத்தியிருப்பார்கள்; அந்த டிரைவரில் உள்ள பிழைகளை நீக்கியிருப்பார்கள்; புதிய வசதிகளை அதில் சேர்த்திருப்பார்கள். எனவே உங்களின் பிரிண்டரைத் தயாரித்த நிறுவனத்தின் வெப் தளத்தில் நுழைத்து, அதன் புதிய பதிப்பு டிரைவர் வெளியாகியிருந்தால் அதை டவுன்லோடு செய்து கம்ப்யூட்டரில் நிறுவுங்கள்.
பிரிண்டரை ஆப் செய்ய, பிரிண்டரில் உள்ள சுவிட்சையே பயன்படுத்துங்கள்; பவர் ப்ளக் அருகே உள்ள சுவிட்சை பயன்படுத்தாதீர்கள். பிரிண்டரில் உள்ள ஆஃப் சுவிட்சை அழுத்தினால், உடனே பிரிண்ட் ஹெட்டை சுத்தம் செய்து அதை சரியான இடத்தில் நிலை நிறுத்துகிற வேலையை பல இங்க்ஜெட் பிரிண்டர்கள் செய்கின்றன.
இப்போதைய பிரிண்டர்கள் எல்லாம் யுஎஸ்பி (USP) போர்ட்டுகளில் இணைக்கப்படும் விதத்திலேயே வெளியாகின்றன. நீங்கள் பயன்படுத்தும் பழைய பிரிண்டரை பேரலல் போர்ட்டில் இணைத்திருந்தால் அந்த பிரிண்டர் கேபிள் IEEE 1284 வரையறைக்கு ஏற்றதா என்பதைப் பாருங்கள். (பல மலிவான பிரிண்டர் கேபிள்கள் உள்ளன. அவை IEEE 1284 வரையறைக்கு ஏற்ப தயாரிக்கப்படடவை அல்ல). இந்த வரையறையிலான கேபிள்களால் அச்சின் வேகம் கூடும். Bidirection வசதி இந்த கேபிளில் உண்டு.
பிரிண்டரை பேரலல் போர்ட்டில் இணைத்திருந்தால் பயாஸின் (BIOS) செட்டப்பில் நுழைந்து ECP அல்லது EPP செட்டிங்கை கொண்டு வர வேண்டும்.Enthaneed Parallel Port (EPP) மற்றும் Enhanced Capabilities Port (ECP) ஆகியவை பயாஸ் செட்டப்பின் எந்த மெனுவின் கீழ் வருகிறது என்பதைப் பார்த்து அவற்றை Enabled என மாற்றுங்கள். பயாஸை பாதுகாத்து வெளியேறுங்கள். இவை எல்லாம் பழைய கம்ப்யூட்டரில், பழைய பிரிண்டரைப் பயன்படுத்துவோருக்கே. நீங்கள் புதியதாக அண்மைக் காலத்தில் இவற்றை வாங்கி இருந்தால், மேலே உள்ளதை ஒதுக்கிவிட்டுப் படியுங்கள்.
பயன்படுத்தாத போது பிரிண்டரை மூடி வையுங்கள். தூசிகள், அழுக்குகள், காகித பிசிறுகள் போன்றவற்றால் பிரிண்டர்கள் சரியாக இயங்காமல் போய் விடும். எனவே பிரிண்டரின் உள்ளே துடையுங்கள். சிறிய வாக்வம் கிளீனர் மூலம் பிரிண்டரின் உள்ளே உள்ள அழுக்குகளை உறிஞ்சி எடுங்கள். தூசிகள் வராத இடத்தில் பிரிண்டரை வைப்பது நல்லது.
பிரிண்டர்ஹெட்டை அவ்வப்போது துடைக்க வேண்டும். பிரிண்டருடன் வந்துள்ள சாப்ட்வேரில் பிரிண்டர்ஹெட்டைச் சுத்தப்படுத்தும் வசதி உள்ளதா எனப் பாருங்கள். இருந்தால் அந்த சாப்ட்வேரை இயக்கி பிரிண்டர்ஹெட்டை துடையுங்கள். சாப்ட்வேரில் அந்த வசதி இல்லாவிடில் பிரிண்டர் ஹெட்டை துடைக்கிற வழி பிரிண்டருக்கான புத்தகத்தில் தரப்பட்டுள்ளதா எனப்பாருங்கள். பிரிண்டர் ஹெட்டை மிதமான வெந்நீரில் நனைய வைத்த பிசிறற்ற துணியால் துடையுங்கள். Isopropxl Alcohol திரவத்தில் முக்கிய பஞ்சால் பிரிண்டர்ஹெட்டை துடைக்கவும் செய்யலாம்.
சரியான காகிதத்தையே பயன்படுத்துங்கள். பிரிண்டருக்கான தகவல் புத்தகத்தில் எப்படிப்பட்ட காகிதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும். மிக அதிக எடை கொண்ட காகிதங்களைப் பயன்படுத்தினால் அவை பிரிண்டரினுள் சிக்கி கொள்ளலாம். சில காகிதங்கள் இங்கை உறிஞ்சி பரப்பி விடுகின்றன. எனவே அச்சைப் பார்க்க/படிக்க எரிச்சலாக இருக்கும். தரமான காகிதங்களைப் பயன்படுத்துங்கள். மடங்கிய, கிழிந்த, வளைந்த காகிதங்களை அச்சடிக்கப் பயன்படுத்தாதீர்கள். இவை பிரிண்டரினுள் சிக்கி கொள்ளலாம்.
இங்க்ஜெட் பிரிண்டர்களைப் பயன்படுத்துகிறவர்கள் வாரம் ஒரு முறையாவது அச்சடிக்க வேண்டும். அந்த வாரம் அச்சடிக்க ஒன்றும் இல்லையே என்று சும்மா இருந்துவிட்டால் இங்க் உறைந்துபோய் விடும். பின்பு இங்க் கார்ட்ரிட்ஜையே தூக்கி எறிய வேண்டியதுதான். எனவே Test Printவசதியைப் பயன்படுத்தி கறுப்பிலும், வண்ணத்திலும் அச்சடியுங்கள். தேவைப்படுகிறதோ இல்லையோ வாரம் ஒரு முறை எதையாவது அச்சடிக்கிற பழக்கத்தை மேற்கொண்டால் பிரச்னைகள் எழாது.
ஓரிரு வாரங்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் கார்ட்ரிட்ஜை கழற்றி, காற்று புகாவண்ணம் நல்ல காகித உறையில் அதை வைத்து மூடுங்கள். கார்ட்ரிட்ஜை வாங்கும்போது அது இருந்த உறையை பத்திரப்படுத்தி வைத்திருந்தால், அந்த உறையை இப்பொழுது பயன்படுத்தலாம்.
அச்சடிப்பதற்கு முன்னர் பிரிண்ட் பிரிவியூவைப் பாருங்கள். பிரிவியூவில் நன்றாக இருந்தால் மட்டுமே அச்சடியுங்கள். இதனால் காகிதமும், இங்க்கும்/டோனரும் வீணாகாது. ஒரு காகிதத்திலேயே பல படங்களை அல்லது டாக்குமெண்டுகளை அச்சடிக்க முடிந்தாலும் நமக்கு பணம் லாபமே. Fine Printஎன்ற யுடிலிட்டியை www.download.comதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள். ஒரு காகிதத்திலேயே பலவற்றை அச்சடிக்கும் ஆற்றல் இதற்குண்டு.
Mobile Phone
மொபைல் போன் குறித்து படிக்கும்போது ஜெயில் பிரேக்கிங் என்று படித்திருப்பீர்கள். இதற்கும் சிறைச் சாலைக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு சம்பந்தமும் இல்லை. டிஜிட்டல் சாதனம் ஒன்றில், அதனை வடிவமைப்பவர், தான் விரும்பும் வகையில் சில வரையறைகளை அமைத்திருப்பார். சாதாரணப் பயன்பாட்டில், அவற்றை மீறிப் பயன்படுத்த முடியாது. மீறினால் வரும் விளைவுகள் பல வேளைகளில் அந்த சாதனத்தையே முடக்கிவிடும்.
மொபைல் போனைப் பொறுத்தவரை ஐ–போன் தொடர்பாகத்தான் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. ஐ–போனை,மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனம் வழியாகத்தான் வாங்க வேண்டும். அப்போது அந்த நிறுவனத்தின் சேவையை மட்டுமே பயன்படுத்தும்படி, ஆப்பிள் நிறுவனம் அதனை வடிவமைத்துத் தருகிறது. அமெரிக்காவில் ஏ.டி. அன்ட் டி நிறுவனம் இதனை விற்பனை செய்வதால், இந்த நிறுவன சேவை மட்டுமே இதில் மேற்கொள்ள முடியும். அங்கிருந்து கொண்டு வரப்படும் போனில், இந்திய நிறுவன சிம் கார்டைப் பயன்படுத்திப் பேச முடியாது. இதனால் சேவை வழங்கும் நிறுவனம், குறிப்பிட்ட கட்டணத்தைக் கட்டாயமாக, போன் வாங்குவோரின் தலையில் சுமத்திவிடும் வாய்ப்பு உண்டு.
இந்த தடையை உடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே ஜெயில் பிரேக்கிங் என அழைக்கப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள், இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களை எழுதி, போனில் பதிந்து தருவார்கள். அதற்கான கட்டணத்தையும் உங்களிடமிருந்து வசூல் செய்திடுவார்கள். ஆனால் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தரும் அப்டேட்டுகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இல்லை என்றால், அந்த தடையையும் முறியடிக்க பணம் செலுத்தி ஜெயில் பிரேக்கிங் சாப்ட்வேரினைப் பெற வேண்டும்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா! அமெரிக்க அரசாங்கம் அண்மையில் சில பிரிவினர், இது போன்ற போன்களில் ஜெயில் பிரேக்கிங் முயற்சிகளை மேற்கொள்ள சட்ட ரீதியாக அனுமதி அளித்துள்ளது.
Portable
புரோகிராம்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, பயன்படுத்திப் பழக்கப்பட்ட புரோகிராம்களில் செயல்படுவதனையே விரும்புவார்கள். இதனால் தான் பெரும்பாலும், பயன்படுத்தும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களையே பணியாற்ற தேர்ந்தெடுப்பார்கள். நாம் பணியாற்றும் பிற கம்ப்யூட்டர்களில், நாம் விரும்பும் அனைத்து புரோகிராம்களையும் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஏன், எடுத்துச் செல்வது கூட சிரமமாக இருக்கும்.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் அனைத்து புரோகிராம்கள் மற்றும் புக்மார்க்குகள், புரோகிராம் அமைப்புகள், இமெயில் கிளையண்ட் புரோகிராம் அமைப்புகள் என அனைத்தையும் எடுத்துச் சென்று, எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படும் வகையில் ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வேறு கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துகையில், நம் தனிநபர் தகவல்கள் எதுவும், பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் களில் தங்காது என்பது இதன் சிறப்பு.
இந்த அப்ளிகேஷனை PortableApps.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இலவசமாகக் கிடைக்கும் இந்த வசதி இரண்டு தொகுப்பாக PortableApps.com Suite and PortableApps Platform என்று கிடைக்கின்றன. இது முற்றிலும் இலவசம். சோதனைக் காலம், அதன் பின் கட்டணம் என்று எதுவும் இல்லை. இதில் ஸ்பைவேர் எதுவும் இணைக்கப்படவில்லை. இதனை காப்பி செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். Portable Apps.com Suite என்பதில் நமக்குத் தேவைப்படும் இணைய பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் தொகுப்பு, காலண்டர்/ திட்டமிடுதல், இன்ஸ்டண்ட் மெசெஜ் அனுப்ப, ஆண்ட்டி வைரஸ், ஆடியோ பிளேயர், சுடோகு கேம்ஸ், பாஸ்வேர்ட் மேனேஜர், பிடிஎப் ரீடர்,பேக் அப் எடுக்க என அனைத்து பணிகளுக்கும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. மொஸில்லா பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட், சன்பர்ட், க்ளாம் விண், பிட்ஜின், சுமத்ரா பிடிஎப், கீ பாஸ் பாஸ்வேர்ட், சுடோகு, மைன்ஸ் பெர்பக்ட் கேம், கூல் பிளேயர், ஓப்பன் ஆபீஸ் / அபி வேர்ட் என அனைத்து வேலைகளுக்குமான புரோகிராம்கள் அனைத்தும் இதில் அடக்கம்.
இந்த தளத்தில் உள்ள சப்போர்ட் பிளாட்பார்மில், இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன் படுத்தும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
முதன் முதலில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான போர்ட்டபிள் அப்ளிகேஷனை உருவாக்கிய ஜான் டி ஹாலர், பின் படிப்படியாக, ஒருவரின் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்குத் தேவையான அனைத்து புரோகிராம்களையும் உருவாக்கி, இவ்வாறு முழுத் தொகுப்பாகக் கொடுத்துள்ளார். இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன் தொகுப்பினை பிளாஷ் ட்ரைவ், ஐபாட், மெமரி கார்ட், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் போன்ற எந்த போர்ட்டபிள் மெமரி சாதனத்திலும் எடுத்துச் செல்லலாம்.
ஒரு இணையதளம் இறங்க மறுத்தால்
முதல் தீர்வாக நீங்கள் செய்ய வேண்டியது, இன்னொரு பிரவுசரைப் பயன்படுத்துவதுதான். எப்போதும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் எதுவாக இருந்தாலும், மற்றொரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்வது, இது போன்ற சூழ்நிலைகளில் கை கொடுக்கும்.
அடுத்த தீர்வு, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது. கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் மறுபடி இயக்கிப் பார்க்கலாம். கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடவும். ரௌட்டருக்கு வரும் மின்சக்தியை நிறுத்திப் பின்னர் இயக்கவும். டி.எஸ்.எல் அல்லது கேபிள் மோடம் வைத்திருந்தாலும் இதே போலச் செயல்படவும். இவை இயங்கத் தொடங்கியதை அவற்றில் உள்ள விளக்குகள் உறுதிப்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். பின் நீங்கள் குறிப்பிடும் தளத்தினைப் பெற முயற்சிக்கவும்.
அடுத்ததாக, குறிப்பிட்ட வெப்சைட்டின் பெயருக்குப் பதிலாக, அதன் இணைய முகவரியை எண்களில் தந்து பார்க்கவும். நாம் சொற்களில் அமைக்கும், இணைய தள முகவரிகள், முகவரிகளே அல்ல. அவை குறிப்பிட்ட இணைய முகவரிகளுக்கான திசை காட்டிகளே. இந்த சொற்கள், அதற்கான எண்களில் அமைந்த முகவரிகளைப் பெறுவதில், ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், இந்த வகையில் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு உங்கள் தளம் உங்களுக்குக் கிடைக்கலாம். இந்த எண்களால் அமைந்த முகவரிகளைப் பெறுவதற்குப் பல வழிகள் உள்ளன.
எளிதான ஒரு வழி, http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php என்ற முகவரியில் உள்ள தளத்தின் மூலம் பெறுவதுதான். இந்த தளம் சென்று, சொற்களில் அமைந்த முகவரியை டைப் செய்து என்டர் தட்டவும். அல்லது Enter என்ற பட்டனில் தட்டவும். எண்களினால் ஆன முகவரி கிடைக்கும். அதனை காப்பி செய்து, பிரவுசரின் முகவரி கட்டத்தில் ஒட்டி முயற்சிக்கவும். இதன் பின்னும் இணையதளம் கிடைக்கவில்லையா! அமைதியாக இருங்கள். தவறு உங்கள் பக்கம் இல்லை. தளத்தின் பக்கம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. தளத்தை அமைத்து இயக்குபவர்களாகப் பார்த்து அதனைச் சரி செய்தால் தான் உண்டு.
ஆனால் எண்களால் ஆன ஐ.பி. முகவரி மூலம் முயற்சிக்கையில், தளம் கிடைத்தால், முகவரிக்கான எண் முகவரி கிடைப்பதில் ஏதோ சிக்கல் உள்ளது என்று பொருள். எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், இந்த பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தச் சூழ்நிலையில், இன்னொரு வழியில் முயற்சிக்கலாம். நோட்பேடினைத் திறக்கவும். அதில் C:\Windows\System32\drivers\etc\hosts என டைப் செய்து என்டர் செய்திடவும். இப்போது உள்ள டெக்ஸ்ட் பைலில் உங்கள் இணையதள முகவரி கிடைக்கிறதா எனப்பார்க்கவும். அந்த முகவரி இருந்தால், அதன் முன் # என்ற அடையாளத்தை இணைக்கவும். பின் அந்த பைலை சேவ் செய்து, பின் பிரவுசரை மீண்டும் இயக்கவும். இப்போதும் தளம் கிடைக்கவில்லை என்றால், கம்ப்யூட்டரை மூடிவிட்டு, இன்னொரு கம்ப்யூட்டரில் முயற்சி செய்து பார்க்கவும். குறிப்பாக பொதுவான கம்ப்யூட்டர் ஒன்றில் முயற்சி செய்து பார்க்கவும்.
இணைய தளம் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயம் மேலே குறிப்பிட்ட வழிகளில் ஒன்றில், தளம் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லையேல் தளம் தானாகச் சரி செய்யப்படும் வரை பொறுத்திருந்து, அவ்வப்போது பெற முயற்சிக்கவும்.
மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்
உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://smallbusiness.officelive.com/en-ca/ தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள "Create a Free Website" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.
"Design Site" லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான "About Us" மற்றும் "Contact Us" தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.
தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருங்கள்.
Desktop
டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களைச் சற்றுப் பெரிதாக வைத்துக் கொள்ளும்முறை
கீழே தரப்பட்டுள்ள நடைமுறை மூலம், ஐகான்களைச் சிறிதாகவும், பெரிதாகவும் மாற்றலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Item என்பதன் கீழ் கிடைக்கும் பட்டியலில் Icon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Size என்ற இடத்தில் கிடைக்கும் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி, ஐகான்களின் அளவைப் பெரிதாகவோ, சிறியதாகவோ அமைக்கலாம். மாற்றங்களை ஏற்படுத்தியபின், Apply என்பதில் கிளிக் செய்திடவும்.
இதே விண்டோவில் Font மற்றும் Size என்று இருப்பதனைப் பார்க்கலாம்.
இன்னொரு மாற்றத்தையும் இதில் ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஐகானுக்கிடையில் உள்ள தூரத்தினை மாற்றலாம். ஐகான்கள் திரையில் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தால், அவற்றை இன்னும் சற்று இடைவெளியில் அமைக்கலாம். Item என்பதன் கீழ் இரண்டு ஆப்ஷன்கள், Icon Spacing (Horizontal) மற்றும் Icon Spacing (Vertical), இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றைப் பயன்படுத்தி, ஐகான்கள் அமையும் இட வெளியை அமைக்கலாம்.
நீங்கள் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 வைத்திருந்தால், மேலே சொன்ன வேலை எல்லாம் தேவையில்லை. ஜஸ்ட், டெஸ்க் டாப் சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால், படங்களும் எழுத்து அளவும் சிறிது, பெரிதாவதைக் காணலாம். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், வியூ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.
File Transfer
பைல்களை மாற்ற
மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை http://www.freecommander.com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். fc_setup.zip என்ற பைல் கிடைக்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகிராமைப் பதிந்து இயக்கலாம். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இரண்டு விண்டோக்களை அடுத்தடுத்து பக்கமாகத் தருகிறது. இதனால் இரு வேறு டைரக்டரிகளில் உள்ள பைல்களை இழுத்து விடுவது எளிது. இந்த புரோகிராமினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
Toggle Key
டொகிள் கீ (Toggle Key) என்றால் என்ன?
சில கீகளின் செயல்பாட்டினை வைத்து இந்த பெயர் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில் கேப்பிடல் எனப்படும் பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock) போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன் பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lock கீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இந்த செயல்முறையில் பயன்படும் கீகளையே டாகிள் கீ (Toggle Key) என அழைக்கிறோம்.


